மத்வர் வழிபட்ட வடபண்டேஷ்வரா பலராமர்! / அஷ்டபந்த பிரம்மகாலஷோத்ஸவம்.
உடுப்பி மாவட்டத்தில் உள்ள மால்பே என்னும் இடத்தில், வடபண்டேஷ்வரா பலராமர் கோயில் உள்ளது. இங்கு, அஷ்டபந்த பிரம்மகாலஷோத்ஸவ என்னும் உற்சவத்தில், பலிமாறு மடத்தின் பீடாதிபதியான ஸ்ரீஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தர் ஸ்வாமிகள் அவர்களும், பலிமாறு மடத்தின் இளைய யதிகளான ஸ்ரீஸ்ரீ வித்யாராஜேஸ்வர தீர்த்த ஸ்வாமிகள் அவர்களும், அதமார் மடத்தின் இளைய யதிகளான ஸ்ரீஸ்ரீ ஈஷப்ரிய தீர்த்த ஸ்வாமிகள் அவர்களும் கலந்துக் கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.
வடபண்டேஸ்வரா ஸ்ரீ வடபண்டா பலராமர் ஆலயத்தின் அஷ்டபந்த பிரம்மகாலஷோத்ஸவ உற்சவத்தில், கடந்த வெள்ளிக் கிழமையன்று சமயக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பலிமாறு மடத்தின் பீடாதிபதியான ஸ்ரீஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தர் ஸ்வாமிஜி அவர்கள் அருளாசி வழங்கியதாவது; ``உடுப்பி மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள அனைத்து பக்தர்களால் இந்த பலராமரின் கோயில் திருப்பணி நடைபெற்றது.
பலராமர், உங்கள் வாழ்வில் நிறைய மகிழ்ச்சியையும், செழிப்பான வாழ்வையும் அருள்பாலிக்கட்டும். இக்கோயிலின் திருப்பணிக்கு உழைத்த அனைவருக்கும், பலராமரின் அருள் சென்றடைய நான் பிரார்த்திக்கிறேன் என அருளாசி வழங்கினார்.
`` வடபண்டேஸ்வரா என்பது மத்வாச்சாரியார் வழிபட்ட தலம். எனவே, அந்த இடம் மிகவும் புனிதமானது. புனிதமான இடத்தில், உண்மையான உள்ளத்துடனும், மனத்துடனும் பிரார்த்தனை செய்தால், நம் விருப்பங்கள் நிறைவேறும். மேலும், கோயில் என்பது தெய்வங்களை பற்றி சிந்திக்கக் கற்றுக் கொடுக்கும் மாபெரும் பள்ளி.
அதே போல், கடவுளின் பிரசன்னம், பிரகாசமாக பிரகாசிக்க வேண்டும் என்றால், அர்ச்சகர்களின் தவம் சிறப்பானதாக இருக்க வேண்டும். இன்று முதல் இவைகளை கடைப்பிடியுங்கள்.’’ இவ்வாறு, அதமார் மடத்தின் இளைய யதிகளான ஸ்ரீஸ்ரீ ஈஷப்ரிய தீர்த்த ஸ்வாமிகள் அருளாசி செய்தார்.
மேலும், இவ்விழாவில் திரண்டிருந்த பக்தர்களுக்கு, பலிமாறு மடத்தின் இளைய யதிகளான ஸ்ரீஸ்ரீ வித்யாராஜேஸ்வர தீர்த்த ஸ்வாமிகளும் ஆசி வழங்கினார். இந்த விழாவில், ரவீந்திரபட் ஹெர்கா, உபன்யாசம் நிகழ்த்தினார்.
அதே போல், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஸ்ரீ முரளி கடேகரு, பிரம்மகலஷோத்ஸவ சமிதி தலைவர் ஸ்ரீ சாது சாலியன், கோட்டா அம்ருதேஸ்வரி, கோவில் நிர்வாக அறங்காவலர் திரு.ஆனந்த் சி குந்தர், தொழிலதிபர், ஸ்ரீ ஆனந்த் பி சுவர்ணா, ஸ்ரீ பிரசாத் ராஜ் காஞ்சன், கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஸ்ரீ உமேஷ் பூஜாரி, ஸ்ரீ கோபால் சி , மால்பே பில்லவர சேவா சங்க தலைவர் சமய சிந்தனையாளர் பேராசிரியர் பவன் கிர்னாரே, நகர் சபா உறுப்பினர் லட்சுமி மஞ்சுநாத் கோல், பெல்லாலே ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகக் குழுத் தலைவர் பிரசாந்த் ஷெட்டி ஆகியோரும் விழவில் கலந்துகொண்டு சிறப்பளித்தனர்.
பலராமர் கோவிலின் வளர்ச்சி மற்றும் புனரமைப்புக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக, கோயில் வளர்ச்சிக் குழுவின் கவுரவத் தலைவர் ஸ்ரீஷா பட் கடேகர், பொதுச் செயலர் ஸ்ரீ சசிதர் அமீன் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
வளர்ச்சி குழு தலைவர் நாகராஜ் மூலிகர், பிரம்மகலஷோத்ஸவ குழு பொது செயலாளர் பிரகாஷ் ஜி கொடவூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஜனார்தன் கொடவூர் வரவேற்றார். நிறைவாக, விரிவுரையாளர் தயானந்த் உகைல்பெட்டு நன்றி கூறினார்.
தேதி: 02.04.2024
தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
கருத்துகள்
கருத்துரையிடுக